பெரம்பலூர்: அரியலூரில் சோகம்: செப்டிக் டேங்கில் மூச்சுத்திணறி 3 பேர் பலி!
அரியலூர் மாவட்டம் செந்துறையில் புதிய செப்டிக் டேங்கில் பலகைகளை அகற்றும் பணியின்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும், தலா 30 லட்சம் இழப்பீடு வழங்கவும் சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.