திருப்பத்தூர்: ஜடையனூர் பகுதியில் தண்ணீர் கேட்பது போல் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம் இரண்டரை சவரன் தங்க நகை பறித்த பெண் கைது
ஜடையனூர் பகுதியைச் சேர்ந்த முனிசாமி மனைவி கண்ணம்மாள் இவர் கணவன் உயிர் இழந்த நிலையில் ஜடையனூர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலவள்ளி பகுதியைச் சேர்ந்த கோகுல் மனைவி சுமதி என்பவர் ஜடையனூர் பகுதிக்கு தனது உறவினரை காண வந்துள்ளார்.அப்போது கண்ணம்மாள் தனியாக இருப்பதை அறிந்து அவருடைய வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டுள்ளார்.அப்போது கண்ணம்மாள் தண்ணீர் கொண்டு வரும் நேரத்தில் அவருடைய கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்க நகை பறித்துக் கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார்.