கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 35 சென்ட் நிலத்தை சில மாதங்களுக்கு முன்பு தனியார் சோலார் நிறுவனம் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததை கண்டித்து லஞ்சம் தர முடியாத காரணத்தினால் தவிடு புண்ணாக்கு பருத்திக்கொட்டை உள்ளிட்டவற்றை மேல தாளங்கள் முழங்க சீர்வரிசை உடன் எடுத்து வந்து மனு வழங்கினார் இதனால் பரபரப்பு