கோவில்பட்டி: நடராஜபுரம் பகுதியில் புனித சூசையப்பர் ஆலய கல்லறையில் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலய கல்லறையில் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது இதில் ஆலய பங்கு தந்தை அருள்ராஜ் மற்றும் உதவி பங்கு தந்தை குழந்தைராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி கல்லறைகளை மந்திரித்தனர்.