கல்குளம்: கன்னியாகுமரி: பல மாதங்களாக சேதமடைந்துள்ள ஆழ்வார்கோவில் சாலை - பொதுமக்கள் கடும் அவதி!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சி ஆழ்வார்கோவில் சந்திப்பில் வட்டம் செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விபத்துகளைத் தவிர்க்க சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.