திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் 33 வார்டுகள் உள்ளது. இங்கு தற்போது அணைகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக வரதமா நதி அணை, குதிரையாறு அணை, பாலாறு பொருந்தலாறு அணை, கோடைகால நீர் தேக்கம் நிறைந்து காணப்படுகிறது. பழனி நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி பழனி திமுக நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் திமுக , அதிமுக ,கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் ஒன்றாக இணைந்து பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளரிடம் முற்றுகையிட்டனர்.