விளவங்கோடு: கன்னியாகுமரி: படந்தாலுமூடு பகுதியில் கடைகளுக்குள் புகுந்த மழைநீர்
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழையால், நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை படந்தாலுமூடு பகுதியில் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. முறையான வடிகால் வசதி இல்லாததால் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.