திருப்பத்தூர்: தென்பென்னை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவமழை காலதாமதமாக பெய்ததால் மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.