கோவில்பட்டி: சார் ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் வாக்கு திருட்டுக்கு எதிராக மனு வழங்கினர்
இந்தியா முழுவதும் தற்போது வாக்குத்திருட்டு என்னும் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாக்குத் திருட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தலைவர் தமிழரசன் தலைமையில் நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவை சார் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர் மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வாக்குத் திருட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியது தொடர்ந்து அவர்கள் கலந்து சென்றனர்