போச்சம்பள்ளி: குடிநீரில் சோப்பு நுரை மற்றும் துர்நாற்றம் - கிராம மக்கள் அவதி!
கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்குப்பம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் சோப்பு நுரை மற்றும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் தலையிட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.