தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு ஜியோ ரோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்டம் களை கட்டியது
வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு ஜியோ ரோடு சுற்றுவட்டார பகுதியில் 1000க்கும் மேற்பட்ட துணிக்கடையில் இயங்கி வருகிறது சின்ன டி நகர் என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மீஞ்சூர் பொன்னேரி ரெட்டேரி புழல் மாதவரம் கொருக்குப்பேட்டை கொடுங்கையூர் மணலி உள்ளிட்ட பகுதியிலிருந்து 10,000 மேற்பட்ட பொதுமக்கள் மழையை பொருட்படுத்தாமல் துணிகளை ஆர்வத்துடன் வாங்கினார் மேலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.