ஆம்பூர்: மின்னூர் பகுதியில் மேம்பாலம் அமைக்க சாலையில் கொட்டப்பட்ட மண்குவியல்கள் மீது ஏறி கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்து
ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியல்கள் மீது நேற்று இரவு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஏறி இறங்கியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ஓட்டுநர் காசிராமன் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இது குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.