பெரம்பலூர்: பெரம்பலூரில் விவசாயிகள் சாலை மறியல்: 50-க்கும் மேற்பட்டோர் கைது
கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி மற்றும் பயிர் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.