பெரம்பலூர்: மதுரை: கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை; 2 குழந்தைகள் பரிதவிப்பு
மதுரை அலங்காநல்லூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக தம்பதியினர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். தாய், தந்தையை இழந்து 7 வயது சிறுமியும், 3 மாதக் குழந்தையும் ஆதரவின்றி தவிக்கும் அவலம் நேர்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.