பெரம்பலூர்: பெரம்பலூரில் இரத்ததான முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு பெரம்பலூர் குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற முகாமில், மாவட்ட ஆட்சியர் திரு. ப. அப்துல் ராசிக் பங்கேற்று இரத்ததானம் வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.