திருப்பத்தூர்: ஆட்சியர் அலுவலகத்தில் ஆதரவற்ற பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கணவரை இழந்து ஆதரவற்ற நிலையிலுள்ள ஜெயராணி என்பவருக்கு 6, 690 ரூபாய் மதிப்பீட்டில் தையல் இயந்திரத்தை கலெக்டர் சிவ செளந்திரவல்லி வழங்கினார்.