தூத்துக்குடி: கனமழையில் விவிடி சிக்னல் அருகே புதிய டூவீலர்கள் சேதம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே ஒரு தனியார் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் கொட்டகையுடன் கூடிய தற்காலிக இருசக்கர வாகன ஷோரூம் அமைத்திருந்தது. இந்நிலையில் கனமழையின் காரணமாக 15க்கும் மேற்பட்ட புதிய இருசக்கர வாகனங்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.