சிவகங்கை: சிவகங்கையில் பயன்பாட்டிற்கு வராத புதிய குடிநீர் தொட்டி: பொதுமக்கள் அவதி
சிவகங்கை ரோஸ் நகர், முன்னாள் ராணுவ வீரர்கள் மருத்துவமனை பின்புறம் கட்டப்பட்டுள்ள புதிய குடிநீர் மேல்தேக்க தொட்டி இதுவரை பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.