மருங்கபுரி: துவரங்குறிச்சி காயமலை காப்புக்காடு உள்ளிட்ட பல்வேறு காடுகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது
தமிழ்நாடு வனத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி வனச்சரகத்திற்குட்பட்ட மேலனைக்கட்டு காப்புக்காடு பகுதிகளிலும் துறையூர் வனச்சரகத்திற்குட்பட்ட குறிச்சிமலை காப்புக்காடு பகுதிகளிலும் மணப்பாறை சரகத்திற்குட்பட்ட பொய்கை மலை காப்புக்காடு பகுதிகளிலும் மற்றும் துவரங்குறிச்சி சரக்கத்திற்குட்பட்ட காயமடை காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது