ஓசூர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்து,தந்தை பெரியார் சதுக்கத்தில் திக ஆர்ப்பாட்டம்.*
சில தினங்களுக்கு முன்பு புது தில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பொழுது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, காலணியை வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தொடர்பான செய்தி வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு, நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இடையே கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் வழக்கறிஞர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.