பழனி பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 14 தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. திண்டுக்கல் மாவட்டம் சார்பாக தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் கடந்த 22ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், கல்லூரி முதல்வர் ரவிசங்கர் ஆகியோர் ஆலோசனையின்படி கல்லூரி வளாகத்தில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.