விளவங்கோடு: கன்னியாகுமரியில் 125 அடி உயர காமராஜர் சிலை அமைக்க கோரிக்கை - நினைவு ஜோதி யாத்திரை தொடக்கம்
காமராஜரின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு களியக்காவிளையில் தொடங்கிய நினைவு ஜோதி யாத்திரை கன்னியாகுமரி சென்றடைகிறது. இதன் ஒரு பகுதியாக, காமராஜருக்கு 125 அடி உயர சிலை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.