அரியலூர்: செந்துறை: செப்டிக் டேங்கிற்குள் இறங்கிய 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறையில், புதிய வீட்டின் செப்டிக் டேங்கிற்குள் சென்ட்ரிங் பலகைகளை அகற்ற இறங்கிய 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.