ஆம்பூர்: கரும்பூர் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்த MLA வில்வநாதன்
ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை கரும்பூர், பார்சனப்பள்ளி கிராம ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்து பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஒப்புகை சீட்டினை வழங்கினார். மேலும் இதில் துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் காவல்துறையினர் என பலரும் கலந்து கொண்டனர்.