பெரம்பலூர்: கீழக்கணவாய் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு
கீழக்கணவாய் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளில் 3 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர்களை உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு விடுதி காப்பாளர் அழைத்துவந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது, அனைத்து மாணவிகளும் நல்ல நிலையில் இருந்ததால் மீண்டும் விடுதிக்கு அழைத்து சென்றனர் இது குறித்து தகவல் அறிந்த ஆட்சி யர் விடுதியில் ஆய்வு செய்தார்.