ஆந்திராவில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கூழாங்கற்கள் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றுள்ளது,அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் கனிமவளத்துறை துணை வட்டாட்சியர் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்,அப்போது அவ்வழியாக வந்த 2 லாரிகளை பறிமுதல் செய்து அதன் ஓட்டுனர்களை போலீசார் கைது செய்தனர்