ஆத்தூர்: திண்டுக்கல் அருகே விபத்து: காரும் பைக்கும் மோதியதில் தம்பதி படுகாயம்
Attur, Dindigul | Oct 22, 2026 திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் உள்ள ஜெய்னி கல்லூரி அருகே, கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தம்பதியினர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.