பாலக்கோடு: தருமபுரி: கிணற்றில் மண் சரிந்து விவசாயி பலி - 20 மணி நேர போராட்டத்திற்குப் பின் சடலமாக மீட்பு
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கிணறு தூர்வாரும் பணியின் போது மண் சரிவில் சிக்கி விவசாயி முருகன் உயிரிழந்தார். 20 மணி நேர மீட்புப் போராட்டத்திற்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.