பாளையங்கோட்டை: ரெட்டியார்பட்டி: மாயமான 2 சிறுமிகள் 7 மணி நேரத்தில் கோவை பேருந்து நிலையத்தில் மீட்பு
ரெட்டியார்பட்டியில் காணாமல் போன இரண்டு சிறுமிகள், தந்தையுடனான பிரச்சனையால் கோவை சென்றது விசாரணையில் தெரியவந்தது. மாநகர போலீசார் கோவையில் அவர்களை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.