தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலைப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஜீவ அனுகிரக அறக்கட்டளை சார்பில் 400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு 400 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார் இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.