பழனி: பழனி பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு
அறையினை அமைச்சர் எம்பி, எம்எல்ஏ ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்
உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் பழனி நகராட்சி வ.உ.சி பேருந்து நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 300 சிசிடிவி கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், உதவி காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன், உட்பட பலர் பங்கேற்றனர்