ஸ்ரீரங்கம்: திருவானைக்காவல் பகுதியில் நிலை தடுமாறு கீழே விழுந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர் நேரு
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திருவானைக்காவல் பகுதியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு இன்று மதியம் 2 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த நபருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை மீட்டு அமைச்சர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.