காரியமங்கலம்: தர்மபுரி பாலக்கோட்டில் இளம்பெண் மாயம் - தந்தை போலீசில் புகார்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, மனவிரக்தியில் இருந்த 26 வயது இளம்பெண் சுல்தானா கடந்த 1-ஆம் தேதி முதல் மாயமானார். குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் தந்தை ஜாகிர் அளித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.