திருவாரூர்: மஞ்சக்கொள்ளை பகுதியில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு சிபிஐ வேட்பாளராக வை செல்வராஜ் அறிவிக்கப்பட்டதிலிருந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மஞ்சக்கொள்ளை பகுதியில் இந்தியா கூட்டணியை சேர்ந்தோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு கதிர்வால் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.