பாலக்கோடு: பாலக்கோடு துர்க்கம்மலை பெருமாள் கோயிலில் புரட்டாசி நடுசனி சிறப்பு பூஜை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு துர்க்கம்மலை ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.