மதுரை கிழக்கு: மதுரை ஹாக்கி அரங்கம் அருகே தேங்கும் மழைநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி!
மதுரை உலக ஹாக்கி அரங்கம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் பின்புறம் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை சேதமடைந்து விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.