கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரம் மற்றும் தாலுகாக்குழு சார்பாக நவம்பர் புரட்சி தினம் ஏ.கே.எஸ் தியேட்டர் ரோடு சிபிஐ அலுவலகம் ஜீவா இல்லத்தில் வைத்து நடைபெற்றது. புரட்சி தினத்திற்கு மாவட்ட உதவி செயலாளர் பாபு தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.