திருப்பத்தூர்: வெளுத்து வாங்கிய மழை- திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மூழ்கடித்த தண்ணீர்
மழையின் காரணமாக திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது.அதேபோல திருப்பத்தூர் வழியாக புதுப்பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே தரைப் பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி நின்றது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகிர்.இதனால் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர்.