தண்டையார்பேட்டை: காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள் கடந்த வாரத்தை விட மீன்கள் அதிகபடியாக வரத்து கூடியது
காசிமேடு பகுதியில் கடந்த வாரம் புயல் மற்றும் மழை சின்னத்திற்கு பிறகு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பெரிய வகை மற்றும் சிறிய வகை மீன்களின் வரத்து அதிகரிப்பால் காசிமேட்டில் மீன் பிரியர்கள் மீன்களை வாங்க குவிந்ததால் அப்பகுதி முழுவதும் களைகட்டி காணப்பட்டது. மேலும் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் பெரிய வகை மீன்களையும் குறைந்த விலைக்கு பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.