ஆத்தூர்: செம்பட்டி அருகே, ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த, ஐயப்ப பக்தர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி
Attur, Dindigul | Dec 13, 2025 ஆந்திர பிரதேசம், சத்தியசாய் மாவட்டம், தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த கருபோட்லோ சோமசேகர் (38) என்பவர் உட்பட அவரது நண்பர்கள் ஒரு காரில் தர்மாவரத்தில் இருந்து திண்டுக்கல் செம்பட்டி வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றனர். கருபோட்லோ சோமசேகர் சாலையை கடந்து சிறுநீர் கழித்து விட்டு வந்துள்ளார். அந்த நேரத்தில் வத்தலகுண்டு பகுதியிலிருந்து திண்டுக்கல் நோக்கி அதி வேகமாக சென்று அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி.