கடலாடி: சாயல்குடி பகுதிகளில் தசரா திருவிழாவை முன்னிட்டு பல்வேறு வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
குலசேகரபட்டினத்தில் புகழ்பெற்ற முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடலாடி பத்திரகாளியம்மன் தசரா குழுவினர், புரசங்குளம் காமாட்சி அம்மன் தசரா குழுவினர்,  குலசேகரபட்டிணம் சென்று கடல் நீராடி, கரகம் எடுத்து வந்து கடலாடியில் காப்பு கட்டி 48 நாட்கள் விரதத்தை தொடங்கினர். இவ்விழாவில் கலந்து கொள்ளும் பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் பல்வேறு வேடமணிந்தனர்