கிண்டி: சென்னையில் அதிரடி: ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டிய 7 பேர் கைது, 90-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் பதிவெண் தகடு இல்லாத 91 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து 100 அல்லது காவல் உதவி செயலி மற்றும் 90031 30103 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.