மயிலாடுதுறை: நான்கு வழிச்சாலை பணிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டப்படும் பாலம் கட்டுமான பணிகளில் நிலக்கரி சாம்பல் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
நாகப்பட்டினம் சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலை 45 A வில் 194 கிலோமீட்டர் தூரத்திற்கு விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் இடையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் புதுச்சேரி கடலூர் மயிலாடுதுறை மாவட்டம் வழியே நாகப்பட்டினம் இடையே சுமார் 6431 கோடி திட்ட மதிப்பீட்டில் நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் எட்டு உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பாலங்களில் உள்ளே நிரப்புவதற்கு தரமான