பழனியில் இருந்து வேலாயுதம் பாளையம் புதூர் செல்லும் தனியார் நகர பேருந்தும், டி கே டி என்ற தனியார் மினி பேருந்தும் பயணிகளை ஏற்றி செல்வதில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகாபுரி அருகே தனியார் மினி பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக அழகாபுரி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பெண்கள் பேருந்தில் ஏறிக் கொண்டிருக்கும்போது பின்னால் வந்த வேலாயுதம்பாளையம் புதூர் செல்லும் தனியார் பேருந்து பேருந்துக்காக நின்ற பெண்கள் மீது மோதுவது போல் சென்றது