அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை துவக்கம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3 முதல் பல்வேறு இடங்களில் தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படும்.