பாளையங்கோட்டை: நெல்லை: நாட்டு வெடிகுண்டு வீசி 'ரீல்ஸ்' வெளியிட்ட வாலிபர் கைது
நெல்லை வண்ணார் பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த அஸ்வின் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த வெடிகுண்டு மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.