காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் தங்கத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை ஒட்டி தங்கத்தேர் உற்சவம் இன்று நடைபெற்றது இதனை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் தங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர்