ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை கிராமத்தில் அமைந்துள்ள தனியார் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 2017 முதல் 2024 வரை செவிலியர் படிப்பை 240 பெண்கள் முடித்துள்ளனர்.இீஇந்த நிலையில் 2025 நவம்பர் மாதத்தில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு 07.01.2026 முதல் 10.01.2026 வரை சென்னையில் நடைபெற்றது. அம்பிளிக்கை கிராமத்தில் அமைந்துள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து பெண்கள் பலர் விண்ணப்பித்தும் அவர்களுக்கு கலந்தாய்விற்கான அழைப்பு வரவில்லை.