அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தவெக நிர்வாகி மீது வழக்கு!
நாகர்கோவிலில் உதவி செய்வதாக கூறி காரில் அழைத்துச் சென்று கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் துறை சமரசம் செய்ய முயன்ற நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரை தொடர்ந்து தற்போது தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.