திருப்பூர் வடக்கு: ஆத்துப்பாளையத்தில், பாஜகவினரிடம் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ வைரல். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆத்துப்பாளையத்தில் வாக்கு சேகரித்து பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில் பிரச்சாரம் செய்த பாஜகவினரிடம் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய சங்கீதா என்பவரை பாஜகவினர் தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்மணி இன்று அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.